< Back
சினிமா செய்திகள்
ஐ.பி.எல் இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் தோல்வி; காவ்யா மாறனுக்கு அமிதாப் பச்சன் ஆறுதல்
சினிமா செய்திகள்

ஐ.பி.எல் இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் தோல்வி; காவ்யா மாறனுக்கு அமிதாப் பச்சன் ஆறுதல்

தினத்தந்தி
|
27 May 2024 1:58 PM IST

ஐ.பி.எல் இறுதிப் போட்டியில் ஹைதராபாத் அணி தோல்வி அடைந்ததும் வருத்தமடைந்த காவ்யா மாறனுக்கு நடிகர் அமிதாப் பச்சன் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் இறுதிப் போட்டியானது நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் இடையே நடைபெற்றது.

இதில்,சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தோல்வியை தழுவியது. இந்த அணியானது வெற்றி பெற்றவுடன் அணியின் உரிமையாளரான காவ்யா மாறன் முகத்தில் சந்தோஷத்தை பார்க்கவே தனி ரசிகர் கூட்டம் இருக்கும்.

இந்நிலையில், நேற்றைய போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றவுடன், அந்த அணியை பாராட்டி காவ்யா மாறன் கைதட்டினார். அப்போது அவர், கேமராவுக்கு முகத்தை காட்டாமல் திரும்பி நின்று ஒரு நிமிடம் அழுதார்.

கண்ணீரை மறைத்து சிரித்தபடி அவரது அணியின் வீரர்களை கைதட்டி வரவேற்றார். இதனை பார்த்த ரசிகர்கள் கஷ்டமாக உள்ளது என சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாலிவுட்டின் மூத்த நடிகரான அமிதாப் பச்சன், காவ்யா மாறனுக்காக வருந்துவதாகத் தெரிவித்துள்ளார்.


அவரது டெய்லி பிளாகில் ஐ.பி.எல் இறுதிப்போட்டி குறித்து குறிப்பிட்ட அவர், "ஐதராபாத் அணி தோல்வியடைந்தது மிகுந்த ஏமாற்றத்தைத் தருகிறது. ஸ்டேடியத்தில் தோல்விக்குப் பிறகு அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் உணர்ச்சிவசப்பட்டு, கண்ணீர் விட்டார். கேமராக்களில் இருந்து முகத்தைத் திருப்பி, தனது கண்ணீரை அவர் மறைத்தார். அவருக்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன். பரவாயில்லை. நாளை இருக்கிறது மை டியர். நம்பிக்கையை இழக்க வேண்டாம் " என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்