அம்பேத்கர் குறித்து அமித் ஷா பேசியது கண்டனத்திற்குரியது - இயக்குநர் வெற்றிமாறன்
|‘விடுதலை’ திரைப்படத்தின் 2ம் பாகம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
சென்னை,
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் 'விடுதலை'. இந்த படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்க அவருடன் இணைந்து விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாவது பாகம் உருவாகியுள்ளது. இதில் பிரகாஷ்ராஜ், சேத்தன், மூணார் ரமேஷ், பவானிஶ்ரீ, இளவரசு, பாலாஜி சக்திவேல், மஞ்சுவாரியர், கிஷோர், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கும் இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.
விடுதலை திரைப்படத்தின் 2ம் பாகம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படத்தை பார்ப்பதற்கு ரசிகர்களுடன் இயக்குநர் வெற்றிமாறன் சென்னையில் காசி திரையரங்கிற்கு இன்று காலை வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசியவர், "ரசிகர்கள் எப்படி படத்தைப் பார்க்கிறார்கள் என்பதைப் பார்ப்பதற்காக வந்தேன். படம் முடிந்ததுக்கு அப்புறம் வரவேற்பு எப்படி இருக்குதுனு தெரியும், ரசிகர் என்ன சொல்றாங்கனு பார்ப்பதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன்" என்று பேசினார்.
அவரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தனர். அம்பேத்கர் குறித்து அமித் ஷா பேசிய சர்ச்சைக் குறித்த கேள்விக்குப் பதிலளித்தவர், "அம்பேத்கர் குறித்து அமித் ஷா பேசியது கண்டனத்திற்குரியது" என்று தனது கருத்தைத் தெரிவித்தார்.
முன்னதாக பாராளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அரசமைப்பு சட்டம் மீது விவாதம் நடந்தது. அப்போது பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா,முன்னதாக நாடாளுமன்றத்தில்ல் அரசியல் சாசனம் மீதான விவாதத்தின்போது மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, சட்ட மேதை அம்பேத்கரை இழிவுபடுத்தும் விதமாக பேசியதாக கூறப்படும் விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.