< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
மகன் நடித்துள்ள படம் வெற்றிபெற்றால் புகை பிடிப்பதை நிறுத்திவிடுகிறேன் - அமீர் கான்
|9 Jan 2025 4:57 AM IST
மகன் நடித்துள்ள படம் வெற்றிபெற்றுவிட்டால் புகை பிடிப்பதை நிறுத்திவிடுவதாக அமீர்கான் தெரிவித்துள்ளார்.
மும்பை,
இந்தி திரைத்துறையில் மிகவும் பிரபலமான நடிகர் அமீர் கான். இவரது மகன் ஜுனைத் கான். இதனிடையே, ஜுனைத் கான் தற்போது இந்தி திரைத்துறையில் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.
இதற்கு முன் மகாராஜ் திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்த ஜுனைத் கான் தற்போது காமெடி கலந்த காதல் திரைப்படமாக உருவாகியுள்ள லவ்யப்பா திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். இத்திரைப்படத்தின் கதாநாயகியாக ஸ்ரீதேவி மகள் குஷி கபூர் நடித்துள்ளார். 'லவ்யப்பா' திரைப்படம் அடுத்த மாதம் 7ம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில், மகன் ஜுனைத் கான் நடித்துள்ள லவ்யப்பா திரைப்படம் வசூல் ரீதியில் வெற்றிபெற்றால் புகை பிடிப்பதை நிறுத்திவிடுகிறேன் என்று நடிகர் அமீர் கான் தெரிவித்துள்ளார்.