< Back
சினிமா செய்திகள்
அம்பானி வீட்டு திருமண விழா: அமெரிக்கா மாடல் அழகியின் இந்தியா குறித்த இன்ஸ்டாகிராம் பதிவு
சினிமா செய்திகள்

அம்பானி வீட்டு திருமண விழா: அமெரிக்கா மாடல் அழகியின் 'இந்தியா' குறித்த இன்ஸ்டாகிராம் பதிவு

தினத்தந்தி
|
16 July 2024 6:44 PM IST

அம்பானி வீட்டு திருமண விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமெரிக்கா மாடல் அழகி கிம் கர்தாஷியன் 'இந்தியா' குறித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

மும்பை,

உலக பணக்காரர்களில் ஒருவரும், பிரபல தொழிலதிபருமான முகேஷ் அம்பானி- நீடா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி. இவருக்கும் தொழிலதிபர் வீரேன் - ஷைலா மெர்ச்சென்ட் தம்பதியின் மகள் ராதிகா மெர்ச்சென்ட்டிற்கும் இடையே கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இதையடுத்து, ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சென்ட் திருமணம் கடந்த 12-ந் தேதி மும்பையில் நடைபெற்றது. அடுத்த நாள் 'சுப ஆசிர்வாதம்' நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் உள்ளூர் திரை பிரபலம் முதல் உலக பிரபலம் வரை பலரும் பங்கேற்றனர். நடிகர் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், கிரிக்கெட் வீரர் டோனி, மல்யுத்த வீரர் ஜான் சீனா, ஹாலிவுட் நடிகர் நடிகைகள், அரசியல் கட்சியினர் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சென்ட் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமெரிக்க மாடல் அழகி கிம் கர்தாஷியன் மற்றும் அவரது சகோதரி க்ளோ கர்தாஷியனுடன் கலந்து கொண்டார். பின்னர், புதுமணத் தம்பதிகள் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் உடன் கிம் கர்தாஷியன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.கிம் கர்தாஷியன் புதுமண தம்பதிகளுடன் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அமெரிக்க மாடல் அழகி கிம் கர்தாஷியன் மும்பையில் உள்ள இஸ்கான் கோவிலுக்கு சென்று ஆரத்தி வழிபாடு செய்தார். பின் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு அளித்தார். மேலும் கிம் கர்தாஷியன் மற்றும் அவரது சகோதரியின் தொண்டு இந்திய ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ளன. அவர் கோவிலுக்கு சென்ற புகைப்படங்களைப் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் "இந்தியா எனது இதயத்தை கொண்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வருகின்றன.

மேலும் செய்திகள்