< Back
சினிமா செய்திகள்
அமரன் திரைப்படத்தை பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக திரையிட வேண்டும் - வானதி சீனிவாசன்
சினிமா செய்திகள்

'அமரன்' திரைப்படத்தை பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக திரையிட வேண்டும் - வானதி சீனிவாசன்

தினத்தந்தி
|
4 Nov 2024 5:29 PM IST

‘அமரன்’ திரைப்படத்தை பள்ளி , கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக திரையிட வேண்டும் என்று பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

கோவை,

தீபாவளியை ஒட்டி இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி நடித்த, 'அமரன்' திரைப்படம் வெளியானது. மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தில், முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயனும், முகுந்தின் மனைவி இந்து ரெபேக்கா கதாபாத்திரத்தில், சாய் பல்லவியும் நடித்துள்ளனர்.

அமரன் படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமாக கமல்ஹாசனை தொலைபேசியில் அழைத்து பாராட்டினார்.

சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படத்தை பார்த்த தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தனது எக்ஸ்தள பக்கத்தில் பாராட்டி பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், தமிழ்நாட்டில் நீண்ட நாட்களுக்கு பிறகு தேசப்பற்று திரைப்படமாக 'அமரன்' வெளியாகியுள்ளது என்று கூறினார். படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார். இந்த படத்தை கமல்ஹாசன் தயாரித்து ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் விநியோகம் செய்தது கூடுதல் மகிழ்ச்சி என்றும் அமரன் திரைப்படத்தை பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக திரையிட வேண்டும் என்றும் கூறினார்.

மேலும் செய்திகள்