< Back
சினிமா செய்திகள்
டிக்கெட் முன்பதிவில் மாஸ் காட்டும் அமரன் படம்
சினிமா செய்திகள்

டிக்கெட் முன்பதிவில் மாஸ் காட்டும் 'அமரன்' படம்

தினத்தந்தி
|
26 Oct 2024 3:39 PM IST

சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'அமரன்' படம் வருகிற தீபாவளி பண்டிகையில் வெளியாக உள்ளது.

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது 'அமரன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இது சிவகார்த்திகேயனின் 21-வது படமாகும். இந்த படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். இதில் நடிகை சாய் பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் இந்த படத்தில் 'முகுந்தன்' என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். புவன் அரோரா, சுரேஷ் சக்கரவர்த்தி, ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். 'அமரன்' திரைப்படம் வருகிற 31-ந் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தின் டீசரும், டிரெய்லரும் ஏற்கனவே வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. மேலும் அடுத்தடுத்த பாடல்களும் வெளியிடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்த படத்திற்கான டிக்கெட் முன்பதிவு வெளிநாடுகளில் தொடங்கப்பட்டுள்ளது. இப்படம் திரைக்கு வர இன்னும் நான்கு நாட்கள் உள்ள நிலையில் வெளிநாடுகளில் டிக்கெட் முன்பதிவு தொடங்கி உள்ளது. டிக்கெட் முன்பதிவில் இதுவரை சுமார் ரூ. 75 லட்சத்துக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் இந்த படம் திரைக்கு வருவதற்குள் இன்னும் அதிக வசூலை வாரிக் குவிக்கும் என்று நம்பப்படுகிறது. சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களை விட அமரன் திரைப்படம் அதிக வசூலை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்