< Back
சினிமா செய்திகள்
அமரன் சமூகப் பொறுப்புடன் எடுக்கப்பட்ட படம் - ராஜ்குமார் பெரியசாமி
சினிமா செய்திகள்

'அமரன்' சமூகப் பொறுப்புடன் எடுக்கப்பட்ட படம் - ராஜ்குமார் பெரியசாமி

தினத்தந்தி
|
11 Nov 2024 1:06 PM IST

'அமரன்' திரைப்படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியதையடுத்து இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி விளக்கமளித்துள்ளார்.

சென்னை,

இயக்குனர் ராஜ்குமார் பெரிய சாமி இயக்கத்தில் கடந்த மாதம் 31-ம் தேதி தீபாவளியன்று வெளியான படம் 'அமரன்'. மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவான இப்படத்தில் முகுந்தாக சிவகார்த்திகேயனும், மனைவி இந்து ரெபேக்காவாக சாய்பல்லவியும் நடித்தனர். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைத்திருந்தார்.

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் இதுவரை ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படம் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. அதே சமயம் ஒரு சில எதிர்ப்புகளும் கிளம்பி வருகின்றன. இத்திரைப்படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, இந்த திரைப்படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இதுகுறித்து விளக்கமளித்துள்ளார்.

"இந்த படம் என்னுடைய சொந்த கருத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது அல்ல. உண்மை சம்பவத்தை தழுவி சமூக பொறுப்புடன் எடுக்கப்பட்டது. ராணுவத்தின் அனுமதி பெற்ற பிறகே இந்த படத்தை இயக்கினேன். படத்தில் இடம்பெற்ற 'பஜ்ரங் பாலி கி ஜெய்' முழக்கம் அவர்களின் பிரத்தியேக முழக்கம்" என்று தெரிவித்துள்ளார். மேலும் 'பஜ்ரங் பாலி கி ஜெய்' என முழக்கமிடுவது ராஜ்கோட் ரெஜிமென்ட்டின் பிரத்யேக முழக்கம், அதை மாற்றி படம் எடுக்க முடியாது எனவும் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் செய்திகள்