புஷ்பா ஸ்டைலில் டேவிட் வார்னருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அல்லு அர்ஜுன்
|ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது 38 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
சென்னை,
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜுன். இவரது நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த படம் 'புஷ்பா தி ரைஸ்'. இப்படம் பான் இந்தியா அளவில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக இவரது நடனத்திற்கு இந்திய அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
புஷ்பா படம் இந்திய ரசிகர்களை மட்டுமில்லாமல் ஆந்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னரையும் வெகுவாக கவர்ந்தது. புஷ்பா பட காட்சிகளை வார்னர் ரீல்ஸ் செய்து வெளியிட்டது இணையத்தில் வைரலானது.
இந்தநிலையில் இன்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது 38 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் அல்லு அர்ஜுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
புஷ்பா படத்தில் வரும் ஒரு பாடலுக்கு வார்னர் நடனமாடும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள அல்லு அர்ஜுன், "எனது சகோதரருக்கு மகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார்.