ஒரு பாடலுக்கு 24 உடைகள் அணிந்த அல்லு அர்ஜுன்
|'புஷ்பா-தி ரைஸ்' படத்தில் இடம்பெற்றிருந்த அனைத்து பாடல்களும் ஹிட் அடித்தன.
சென்னை,
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், ஜகதீஷ், சுனில், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த படம் 'புஷ்பா-தி ரைஸ்'. இப்படம் மட்டுமில்லாமல், இதில் இடம்பெற்றிருந்த அனைத்து பாடல்களும் ஹிட் அடித்தன.
குறிப்பாக இதில் வரும் 'ஏய் பேட்டா இது என் பட்டா' பாடல் ரசிகர்களால் விரும்பப்படும் ஒன்றாகவும் மாறியது. இப்படம் வெற்றிபெற இப்பாடலின் பங்கும் சிறிதளவு உள்ளது. இந்நிலையில், இந்த பாடலில் நடிக்க அல்லு அர்ஜுன் 24 உடைகள் அணிந்திருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இப்படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமான 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.