புஷ்பா 2 புரமோஷன்களில் பகத் பாசில் கலந்துகொள்ளாதது குறித்து பேசிய அல்லு அர்ஜுன்
|சமீபத்தில் கேரளாவின் கொச்சியில், புஷ்பா 2 படத்தின் புரமோஷன் பணி நடைபெற்றது.
சென்னை,
கடந்த 2021-ம் ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளியான படம் 'புஷ்பா தி ரைஸ்'. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது இதன் இரண்டாம் பாகமாக 'புஷ்பா 2 தி ரூல்' படம் உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
இப்படம் அடுத்த மாதம் 5-ந் தேதி உலகளவில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. தற்போது, இப்படத்தின் புரமோஷன் பணிக்காக படக்குழுவினர் பல இடங்களுக்கு சென்று வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் கேரளாவின் கொச்சியில், படத்தின் புரமோஷன் பணி நடைபெற்றது.
இதில் பகத் பாசில் கலந்துகொள்ளாதநிலையில், அவரை மிகவும் மிஸ் பண்ணுவதாக அல்லு அர்ஜுன் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், 'நான் இதுவரை பணியாற்றிய படங்களில் என்னுடன் நடித்த நடிகர்களில் மிகவும் சிறந்த மலையாள நடிகர் யார் என்றால் அது பகத் பாசில்தான். அவரை இங்கு மிகவும் மிஸ் பண்ணுகிறேன். அவருடன் ஒன்றாக நிற்க விரும்பினேன்' என்றார்.