இளம் நடிகையை பாராட்டிய அல்லு அர்ஜுன், ஜூனியர் என்.டி.ஆர்
|நடிகை நயன் சரிகாவை அல்லு அர்ஜுன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் பாராட்டியுள்ளனர்.
சென்னை,
இளம் நடிகை நயன் சரிகா, சமீபத்தில் வெளியான 'அய்' படத்தில் தனது நடிப்பிற்காக பாராட்டுகளை பெற்று வருகிறார். இப்படம் கடந்த மாதம் சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியானது. பல்லவி கதாபாத்திரத்தில் சரிகா நடித்த இப்படம் ரூ.15 கோடிக்கு மேல் வசூலித்தது.
'அய்' படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியடைந்த நயன் சரிகா, தன் மீதும் திரைப்படத்தின் மீதும் அன்பைப் பொழிந்த பார்வையாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், 'பார்வையாளர்கள் இவ்வளவு அன்பு கொடுப்பதைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. டோலிவுட்டில் இதைவிட சிறந்த தொடக்கத்தை என்னால் எதிர்பார்க்க முடியாது. இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த கீதா ஆர்ட்ஸ் மற்றும் இயக்குனர் அஞ்சி சாருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்,' என்றார்
நயன் சரிகா, 'அய்' குழுவுடன் சேர்ந்து, சமீபத்தில் டோலிவுட் நட்சத்திரங்கள் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் அல்லு அர்ஜுனை சந்தித்தார். அப்போது, இரு நட்சத்திர ஹீரோக்களும் அவரது நடிப்பைப் பாராட்டினர். இது குறித்து நயன் சரிகா கூறுகையில்,
'என் கதாபாத்திரத்தை நான் எளிதாக எடுத்துச் சென்றதாக ஜூனியர் என்.டி.ஆர் சார் சொன்னார். மேலும், நான் தென்னிந்தியர் இல்லை என்பதை அறிந்து ஆச்சரியப்பட்டதாக அல்லு அர்ஜுன் சார் கூறினார். இந்த பெரிய நட்சத்திரங்களின் பாராட்டுகள் உற்சாகத்தை கொடுத்துள்ளது,'என்றார்.