< Back
சினிமா செய்திகள்
நான் நடிக்கும் எல்லா படங்களுமே பான் இந்தியா படங்கள் - மீனாட்சி சவுத்ரி
சினிமா செய்திகள்

நான் நடிக்கும் எல்லா படங்களுமே பான் இந்தியா படங்கள் - மீனாட்சி சவுத்ரி

தினத்தந்தி
|
24 July 2024 9:08 AM IST

பட வாய்ப்புகள் கடவுள் தந்த வரம் என்று கோட் பட நடிகை மீனாட்சி சவுத்ரி கூறியுள்ளார்.

சென்னை,

தமிழில் விஜய் ஆண்டனியின் 'கொலை' படம் மூலம் அறிமுகமான மீனாட்சி சவுத்ரி தற்போது விஜய் ஜோடியாக 'தி கோட்' படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கிலும் பிரபல நடிகையாக இருக்கிறார்.

இந்த நிலையில் மீனாட்சி சவுத்ரி அளித்துள்ள பேட்டியில், ''எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வருகின்றன. இது மகிழ்ச்சி அளிக்கிறது. விஜய் ஜோடியாக நடித்துள்ள 'தி கோட்' படம் பான் இந்தியா படமாக செப்டம்பர் மாதம் திரைக்கு வருகிறது. துல்கர் சல்மான் ஜோடியாக நடித்துள்ள 'லக்கி பாஸ்கர்' படமும் அதே மாதம் வெளியாகிறது. தெலுங்கில் வெங்கடேஷ் ஜோடியாக புதிய படத்தில் நடித்து வருகிறேன். வருண் தேஜ் ஜோடியாக 'மட்கா' படத்திலும் நடிக்கிறேன்.

எல்லா பட வாய்ப்புகளுமே கடவுள் எனக்கு கொடுத்த வரம். நான் நடிக்கும் எல்லா படங்களுமே பான் இந்தியா படங்கள். இதை நினைக்கும்போது ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும், இன்னொரு பக்கம் பயமாகவும் இருக்கிறது. இளம் நடிகர்களுக்கும், சீனியர் நடிகர்களுக்கும் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு எனக்கு மட்டும்தான் கிடைத்துள்ளது'' என்றார்.

மேலும் செய்திகள்