உருவக்கேலியால் காட்டமான நடிகை ஆலியா பட்
|உருவக்கேலியால் காட்டமான நடிகை ஆலியா பட் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
மும்பை,
இந்தி திரைத்துறையின் முன்னணி நடிகை ஆலியாபட். ஹிந்தி சினிமாவில் முக்கியமான நடிகையாக இருக்கும் ஆலியா பட் 2012-இல் ஸ்டூடண்ட் ஆப் தி இயர் படத்தில் அறிமுகமானார். கங்குபாய் கதியவாடி படத்தில் தேசிய விருது பெற்றார். அவரது நடிப்பில் வெளியான ஹைவே, உட்தா பஞ்சாப், டியர் ஜிந்தகி, ராஜி, கல்லி பாய், ராக்கி ராணி ஆகிய படங்கள் மிகவும் வரவேற்பினைப் பெற்றன.
தற்போது இவர் நடிப்பில் வெளியான படம் ஜிக்ரா. இப்படம் பாக்ஸ் ஆபிசில் எதிர்பார்த்த அளவிற்கு செயல்படவில்லை. இந்த சூழலில் நடிகை ஆலியா பட், சிரிப்பு மற்றும் பின்பக்கம் குறித்து உருவக்கேலி செய்து பல்வேறு கருத்துகள் இணையத்தில் பரப்பி வந்தனர். இந்நிலையில், உருவக்கேலியால் காட்டமான நடிகை ஆலியா பட் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆலியா பகிர்ந்துள்ள பதிவில், 'இந்த மாதிரி தவறாக தகவல்களை ஏன் பரப்புகிறீர்கள்?. எனக்கு ஒன்றும் புரியவில்லை. இதனால் நான் முடங்கி விடுவேன் என்று எண்ணாதீர்கள்' என்று தெரிவித்துள்ளார்.