< Back
சினிமா செய்திகள்
விஜயகாந்த்தின் நினைவு நாளை முன்னிட்டு சிறப்பு போஸ்டரை வெளியிட்ட அலங்கு படக்குழு
சினிமா செய்திகள்

விஜயகாந்த்தின் நினைவு நாளை முன்னிட்டு சிறப்பு போஸ்டரை வெளியிட்ட 'அலங்கு' படக்குழு

தினத்தந்தி
|
28 Dec 2024 8:04 PM IST

கேப்டன் விஜயகாந்தை நினைவுக்கூரும் விதமாக சிறப்பு போஸ்டரை அலங்கு படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

சென்னை,

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28-ம் தேதி உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். இதனிடையே, விஜயகாந்த் மறைந்து இன்றுடன் ஓராண்டாகிறது. அவரது முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகின்றது. இதையொட்டி கோயம்பேட்டில் உள்ள விஜய்காந்தின் நினைவிடத்தில் தொண்டர்கள், பல்வேறு கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் கேப்டன் விஜயகாந்தை நினைவுக்கூரும் விதமாக சிறப்பு போஸ்டர் ஒன்றை 'அலங்கு' படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர்கள் வெளியிட்டிருக்கும் போஸ்டரில் "எனக்கு எல்லா உசுரும் ஒன்னு தான்" என்ற வாசனம் இடம் பெற்றிருந்தது.

எஸ்.பி. சக்திவேல் இயக்கத்தில் நேற்று திரையரங்குகளில் வெளியான அலங்கு திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இப்படம் தமிழக - கேரள எல்லைப்பகுதியில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஆக்சன் - திரில்லர் படமாக உருவாகியிருக்கிறது.

மேலும் செய்திகள்