< Back
சினிமா செய்திகள்
Akshay Kumars Sky Force trailer out
சினிமா செய்திகள்

அக்சய் குமாரின் 'ஸ்கை போர்ஸ்' பட டிரெய்லர் வெளியானது

தினத்தந்தி
|
5 Jan 2025 1:45 PM IST

வருகிற 24-ந் தேதி இப்படம் வெளியாக உள்ளது.

சென்னை,

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அக்சய் குமார். சமீபத்தில் இவரின் நடிப்பில் "ஓஎம்ஜி -2, சர்பிரா, கேல் கேல் மெய்ன் மற்றும் சிங்கம் அகெய்ன்" ஆகிய திரைப்படங்கள் வெளியாகின. இந்த படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

இதற்கிடையில், பிஷேக் அனில் கபூர் மற்றும் சந்தீப் கெவ்லானி ஆகியோரால் இயக்கப்பட்ட 'ஸ்கை போர்ஸ்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் நிம்ரத் கவுர் , சாரா அலி கான் மற்றும் வீர் பஹாரியா ஆகியோர் அக்சய் குமாருடன் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த படத்தை மடாக் பிலிம்ஸ் மற்றும் ஜியோ ஸ்டுடியோ இணைந்து தயாரித்துள்ளன. இந்தியாவின் முதல் மற்றும் மிகக் கொடிய வான்வழித் தாக்குதலை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகி உள்ளது.

இந்த திரைப்படம் வருகிற 24-ந் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு உலக அளவில் வெளியாக உள்ளநிலையில் தற்போது அதன் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்