கண்ணில் ஏற்பட்ட காயம் பற்றி கேட்ட செய்தியாளர்: வேடிக்கையான பதில் கூறிய அக்சய் குமார்
|அக்சய் குமார் தற்போது 'ஹவுஸ்புல்' தொடரின் 5-ம் பாகத்தில் நடித்து வருகிறார்.
சென்னை,
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அக்சய் குமார். இவர், தமிழில் ரஜினியுடன் 2.0 திரைப்படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் இவரின் நடிப்பில் ஓஎம்ஜி -2, 'சர்பிரா', 'கேல் கேல் மெய்ன்' மற்றும் சிங்கம் அகெய்ன் ஆகிய திரைப்படங்கள் வெளியாகின.
தற்போதி இவர் 'ஹவுஸ்புல்' தொடரின் 5-ம் பாகத்தில் நடித்து வருகிறார். இதுவரை எந்த இந்திய படமும் 5-ம் பாகத்தை எட்டாதநிலையில், 5-வது பாகத்தை எட்டிய முதல் இந்திபடம் என்ற பெருமை 'ஹவுஸ்புல்' படத்தையே சேரும்.
இதில், அக்சய் குமார், ரித்தேஷ் தேஷ்முக், அபிஷேக் பச்சன், சஞ்சய் தத், பர்தீன் கான், நானா படேகர், சங்கி பாண்டே, ஜாக்கி ஷெராப், ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் டினோ மோரியா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பின்போது, நடிகர் அக்சய் குமாருக்கு கண்ணில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், காயம் தொடர்பான செய்தியாளரின் கேள்விக்கு அக்சய் பதிலளிதுள்ளார். அதன்படி, 'என்னால் உங்களை பார்க்க முடிகிறது' என்று வேடிக்கையாக கூறினார்.
தகவலின்படி, ஒரு சண்டை காட்சியின்போது அக்சய் குமாருக்கு கண்ணில் காயம் ஏற்பட்டதாகவும் உடனடியாக கண் டாக்டரை படப்பிடிப்பு தளத்திற்கு வரவழைத்து சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.