< Back
சினிமா செய்திகள்
குட் பேட் அக்லி படத்திற்கு அஜித் வாங்கிய சம்பளம்.. இத்தனை கோடியா?
சினிமா செய்திகள்

'குட் பேட் அக்லி' படத்திற்கு அஜித் வாங்கிய சம்பளம்.. இத்தனை கோடியா?

தினத்தந்தி
|
8 Feb 2025 12:23 PM IST

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடித்து வரும் 'குட் பேட் அக்லி' படம் வருகிற மே மாதம் வெளியாக உள்ளது.

சென்னை,

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் தனது 63-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு 'குட் பேட் அக்லி' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படம் வருகிற ஏப்ரல் 10-ம் தேதி வெளியாக உள்ளது. தற்போது இப்படத்தின் பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.

இப்படம் சுமார் ரூ.270 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. அதில் நடிகர் அஜித் குமார் ரூ.163 கோடி சம்பளம் பெற்றுள்ள தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு ரூ.10 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. விடாமுயற்சி படம் எதிர்பார்த்த அளவு இல்லாததால் தற்போது ரசிகர்கள் கவனம் முழுக்க குட் பேட் அக்லி திரைப்படம் பக்கம் திரும்பி இருக்கிறது. இதற்கிடையில் பிப்ரவரி 14ந் தேதி காதலர் தினத்தன்று குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்