< Back
சினிமா செய்திகள்
கே.ஜி.எப் இயக்குனருடன் இணையும் நடிகர் அஜித்?
சினிமா செய்திகள்

கே.ஜி.எப் இயக்குனருடன் இணையும் நடிகர் அஜித்?

தினத்தந்தி
|
24 July 2024 4:40 PM IST

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் அஜித் 2 படங்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

சென்னை,

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' மற்றும் 'குட் பேட் அக்லி' படங்களில் நடித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அஜர்பைஜானில் நடைபெற்று வந்த 'விடாமுயற்சி' படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்ததாக படக்குழு தெரிவித்தது.

இந்நிலையில், கே.ஜி.எப் இயக்குனருடன் நடிகர் அஜித் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. கே.ஜி.எப், சலார் உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் அஜித் 2 திரைப்படங்களில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, "சலார் 2" படத்தின் படப்பிடிப்பு முடித்த பின்னர், அஜித்தின் இந்த படங்களை பிரசாந்த் நீல் இயக்க உள்ளதாக தெரிகிறது.

இது அஜித்தின் 64 மற்றும் 65-வது படங்களாகவோ அல்லது 65 மற்றும் 66-வது படங்களாகவோ இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு அடுத்த ஆண்டு வெளியாகும் என தெரிகிறது.

மேலும் செய்திகள்