< Back
சினிமா செய்திகள்
மீண்டும் கார் ரேஸிங்கில் களமிறங்கிய அஜித்குமார்
சினிமா செய்திகள்

மீண்டும் கார் ரேஸிங்கில் களமிறங்கிய அஜித்குமார்

தினத்தந்தி
|
28 Nov 2024 10:49 AM IST

நடிகர் அஜித் குமார் தனது ரேஸிங் காரை அறிமுகப்படுத்தியுள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரானவர் அஜித்குமார். இவர் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்திலும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'குட் பேட் அக்லி' படத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்களின் படப்பிடிப்பு பணிகள் ஓரளவு முடிந்து விட்டன. இப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன.

இவர் நடிப்பு மட்டுமில்லாமல் பைக் மற்றும் கார் ஓட்டுவதிலும் அதிக ஆர்வம் உள்ளவர் என்பது ரசிகர்களுக்கு தெரிந்த விஷயம்தான். கடந்த சில தினங்களுக்கு முன்னர் 'அஜித்குமார் ரேஸிங்'என்ற பெயரில் புதிய கார் ரேஸ் அணியை உருவாக்கியுள்ளார். மேலும் அணியின் உரிமையாளர் மற்றும் முதன்மை ஓட்டுநராக அஜித் செயல்படுவார். 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் கார் ரேஸிங்கில் களமிறங்க உள்ளார். அதன்படி 2025 ஜனவரி மாதம் துபாயில் நடைபெற உள்ள கார் ரேஸிங்கில் அஜித் குமார் மற்றும் அவரது ரேஸிங் அணியுடன் கலந்துகொள்ள உள்ளார். இதற்காக அவர் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

தற்போது நடிகர் அஜித் குமார் தனது ரேஸிங் காரை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த நிலையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் லோகோவை தனது நிறுவனத்தின் காரிலும் அஜித் பயன்படுத்தியுள்ளார். மேலும் அந்த கார் மற்றும் தனது அணியுடன் அஜித் இருக்கும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இது அஜித்குமாரின் ரசிகர்களின் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்