கார் ரேஸிங்கிற்காக துபாய் புறப்பட்ட நடிகர் அஜித்!
|கார் ரேஸிங்கிற்காக துபாய் புறப்பட்ட நடிகர் அஜித்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சென்னை,
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரானவர் அஜித்குமார். இவர் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்திலும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'குட் பேட் அக்லி' படத்திலும் நடித்துள்ளார்.
அஜித் நடிப்பு மட்டுமில்லாமல் பைக் மற்றும் கார் ஓட்டுவதிலும் அதிக ஆர்வம் உள்ளவர் என்பது ரசிகர்களுக்கு தெரிந்த விஷயம்தான். சமீபத்தில் 'அஜித்குமார் ரேஸிங்'என்ற பெயரில் புதிய கார் ரேஸ் அணியை உருவாக்கியுள்ளார். மேலும் அணியின் உரிமையாளர் மற்றும் முதன்மை ஓட்டுநராக அஜித் செயல்படுவார். 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் கார் ரேஸிங்கில் களமிறங்க உள்ளார். அதன்படி துபாயில் நடைபெற உள்ள கார் ரேஸிங்கில் அஜித் குமார் மற்றும் அவரது ரேஸிங் அணியுடன் கலந்துகொள்ள உள்ளார். இதற்காக அவர் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டார்.
தற்போது கார் பந்தயத்தில் கலந்துகொள்வதற்காக துபாய்க்கு கிளம்பியிருக்கின்றார். சென்னை விமான நிலையத்தில் தனது மனைவி ஷாலினியை கட்டிப்பிடித்த அஜித் தனது மகனை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து வழியனுப்பினார். அப்போது ஏர்போட்டில் எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.