< Back
சினிமா செய்திகள்
Ajith completes dubbing for Vidaamuyarchi
சினிமா செய்திகள்

'விடாமுயற்சி' படத்தின் டப்பிங்கை நிறைவு செய்த அஜித்

தினத்தந்தி
|
7 Dec 2024 8:20 PM IST

'விடாமுயற்சி' படம் வரும் பொங்கல் பண்டிகை அன்று வெளியாக உள்ளது.

சென்னை,

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடித்துள்ளார். மகிழ்த்திருமேனி இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வரும் பொங்கல் பண்டிகை அன்று இப்படம் வெளியாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியானது. அதில், எல்லோரும் எல்லாமும் கைவிடும்போது உன்னை நம்பு.... என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது.

தற்போது இப்படத்திற்கான இறுதி கட்டப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி, கடந்த 2 தினங்களுக்கு முன்பு டப்பிங் பணியை தொடங்கி இருந்த நடிகர் அஜித் தற்போது அதனை முடித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகள்