< Back
சினிமா செய்திகள்
கன்னியாகுமரி: தாணுமாலய சாமி கோவிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம்
சினிமா செய்திகள்

கன்னியாகுமரி: தாணுமாலய சாமி கோவிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம்

தினத்தந்தி
|
20 Nov 2024 1:44 AM IST

கன்னியாகுமரி சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலய சாமி கோவிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்தார்.

நாகர்கோவில்,

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் புகழ்பெற்ற தாணுமாலய சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நேற்று இரவு சாமி தரிசனம் செய்தார்.

கோவிலுக்கு வந்த பின்னணி பாடகியும், டைரக்டரும் ஐஸ்வர்யாவை கோவில் நிர்வாகத்தினர் வரவேற்றனர். இதையடுத்து, கோவில் உள்ள தாணுமாலயன் சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதி, கொன்றையடி சன்னதி, கோவில் சுற்றுப்பிரகாரங்களில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தசினமம் செய்தார்.

தொடர்ந்து ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா திடீரென்று சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்தது அங்கு சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்