நான்காவது முறையாக விஜய்யுடன் இணையும் அட்லீ?
|சல்மான் கான், கமல்ஹாசன் கூட்டணியில் உருவாக உள்ள புதிய படத்தில் நடிகர் விஜய் கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை,
நடிகர் விஜய் கடைசியாக கோட் படத்தில் நடித்திருந்த நிலையில் இந்த படம் கிட்டத்தட்ட 400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. அடுத்ததாக நடிகர் விஜய் அரசியலில் களமிறங்கி இருப்பதால் 'தளபதி 69' திரைப்படம் தான் தனது கடைசி படம் என ஏற்கனவே அறிவித்திருந்தார்.
'தளபதி 69' திரைப்படத்தின் படப்பிடிப்புகளும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டு மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 'தளபதி 69' படமானது அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் நடிகர் விஜய், 'தளபதி 69' படத்தை தொடர்ந்து புதிய படம் ஒன்றில் நடிக்க போகிறார் என தகவல் வெளியாகி வருகிறது. ராஜா ராணி, மெர்சல், பிகில் உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் இயக்குனர் அட்லீ. இவர் கடைசியாக ஷாருக்கான் நடிப்பில் இயக்கியிருந்த ஜவான் திரைப்படம் 1000 கோடி வசூலை அள்ளியது.
இவர் கமல்ஹாசன் மற்றும் சல்மான் கான் ஆகியோரின் கூட்டணியில் புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாக சமீப காலமாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் இதன் புதிய தகவல் என்னவென்றால், சல்மான் கான், கமல்ஹாசன் கூட்டணியில் உருவாக உள்ள புதிய படத்தில் நடிகர் விஜய் கேமியோ ரோலில் நடிக்க உள்ளாராம். இந்த படத்தின் பாடல் ஒன்றுக்கும் நடனமாட இருக்கிறாராம் விஜய். மேலும் இந்த புதிய படத்தினை ஏ பார் ஆப்பிள், சன் பிக்சர்ஸ், ஜியோ ஸ்டூடியோ ஆகிய மூன்று நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கப் போவதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரி்கிறது.
நடிகர் விஜய், அட்லீ கூட்டணியில் ஏற்கனவே வெளியான தெறி, மெர்சல், பிகில் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.