< Back
சினிமா செய்திகள்
அம்பானி இல்ல திருமண விழா: ஐஸ்வர்யாராய், அபிஷேக் பச்சனுடன்    எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரல்
சினிமா செய்திகள்

அம்பானி இல்ல திருமண விழா: ஐஸ்வர்யாராய், அபிஷேக் பச்சனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரல்

தினத்தந்தி
|
15 July 2024 9:44 PM IST

ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சன்ட் திருமண நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் மற்றும் மகள் ஆராத்யா ஆகியோர் ஒன்றாக இருக்கும் புகைப்படம் வைரல் ஆனது.

மும்பை,

பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானி- நீடா அம்பானி மகன் ஆனந்த் அம்பானி திருமண நிகழ்ச்சி மும்பையில் கோலாகலமாக நடந்தது. கடந்த 13-ந் தேதி இரவு ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் வெகு விமரிசையாக நடந்தது.

உலகமே உற்று நோக்கிய இந்த திருமணத்தில் உள்ளூர் தலைவர்கள் முதல் உலக தலைவர்கள் வரை அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டனர். ஹாலிவுட் திரை நட்சத்திரங்கள், இந்தியாவின் முன்னணி நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தொழில் அதிபர்கள், அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

அதில், ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா இருவரும் தனியாக வந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். அதன் பின்னர் நிகழ்ச்சிக்கு வந்த அபிஷேக் பச்சன், அமிதாப் பச்சன், ஜெயா பச்சன் மற்றும் குடும்பத்தினர்கள் புகைப்படங்களை எடுத்து கொண்டனர். இது அந்த நிகழ்ச்சிக்கு வந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

அதன் பின்னரே அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் மற்றும் மகள் ஆராத்யா ஒன்றாக புகைப்படம் எடுத்து கொண்டனர். இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் ஹிருத்திக் ரோஷன் அபிஷேக் பச்சன் அருகில் அமர்ந்திருந்தார்.

மேலும் செய்திகள்