< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
8 வருடங்களுக்குப் பிறகு மலையாள படத்தில் நடிக்கும் சமுத்திரக்கனி
|12 Nov 2024 8:57 PM IST
இப்படத்தில் லப்பர் பந்து பட நடிகை சுவாசிகா போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
சென்னை,
தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான சமுத்திரக்கனி, அதன் பிறகு கடந்த 10 வருடங்களில் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் பிசியான நடிகராக மாறிவிட்டார். அதேசமயம் மலையாளத்திலும் சமுத்திரக்கனி சில படங்களில் நடித்துள்ளார்.
அதன்படி, ஷிகார், திருவம்பாடி தம்பான், கரிங்குன்னம் சிக்சஸ் உள்ளிட்ட படங்களில் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இவர் கடைசியாக மலையாளத்தில் நடித்த படம் 2016ல் பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான 'ஒப்பம்'.
அதன்பிறகு, மலையாளத்தில் நடிக்காத சமுத்திரக்கனி தற்போது எட்டு வருடங்களுக்கு பிறகு ‛ஒரு அன்வேசத்தின்டே தொடக்கம்' என்கிற படத்தில் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இவருடன், லப்பர் பந்து பட நடிகை சுவாசிகாவும் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.