மீண்டும் இணையும் ஆஷிகி 2 கூட்டணி?
|ஷ்ரத்தா கபூரின் அடுத்த படம் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது.
சென்னை,
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான 'சாஹோ' படத்தில் பிரபாஸ் ஜோடியாக நடித்து பிரபலமானவர் ஷ்ரத்தா கபூர். இந்தியில் 'ஆஷிக் 2, ஹைதர், ராக் ஆன்-2, ஓகே ஜானு' உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார்.
இவர் கடைசியாக 'ஸ்ட்ரீ 2' படத்தில் நடித்திருந்தார். ரூ.700 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இந்நிலையில், ஷ்ரத்தா கபூரின் அடுத்த படம் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது.
அதன்படி, இயக்குனர் மோஹித் சூரியின் அடுத்த படத்தில் அதித்யா ராவ் கபூருக்கு ஜோடியாக ஷரத்தா கபூர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2013-ம் ஆண்டு மோஹித் சூரி இயக்கிய ஆஷிகி 2 படத்தில் இருவரும் நடித்திருந்தனர்.
தற்போது வெளியாகி இருக்கும் தகவல் உண்மையாகும் பட்சத்தில் இந்த கூட்டணி 2-வது முறையாக இணையும் படமாக இது இருக்கும். இதனையடுத்து இருவரையும் ஒன்றாக மீண்டும் திரையில் காண ரசிகர்கள் ஆவலுடம் உள்ளனர்.