< Back
சினிமா செய்திகள்
Aditi Shankar will be acting with suriya
சினிமா செய்திகள்

ஆகாஷ் முரளியை தொடர்ந்து அதர்வாவுடன் நடிக்கும் அதிதி ஷங்கர்

தினத்தந்தி
|
10 July 2024 2:38 PM IST

அதிதி ஷங்கர், கார்த்திக் ஜோடியாக 'விருமன்' படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார்.

சென்னை,

இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி. இவர் கார்த்திக் ஜோடியாக 'விருமன்' படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'மாவீரன்' படத்திலும் நடித்தார்.

தற்போது, இவர் நடிகர் முரளியின் மகனும், அதர்வாவின் தம்பியுமான ஆகாஷ் முரளியுடன் 'நேசிப்பாயா' படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், ஆகாஷ் முரளியை தொடர்ந்து அவரது அண்ணன் அதர்வாவிற்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்க உள்ளார்.

இந்த படத்தினை 'ஒரு கல் ஒரு கண்ணாடி' மற்றும் 'சிவா மனசுல சக்தி' உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜேஷ் இயக்குகிறார். ஸ்ரீவாரி பிலிம் இப்படத்தை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அதிதி அடுத்தது கார்த்திக்கின் அண்ணன் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்