< Back
சினிமா செய்திகள்
Aditi Shankar Debut in Telugu - Official Announcement Released
சினிமா செய்திகள்

தெலுங்கில் அறிமுகமாகும் அதிதி ஷங்கர் - வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தினத்தந்தி
|
16 Nov 2024 7:21 AM IST

அதிதி ஷங்கர் தெலுங்கில் அறிமுகமாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சென்னை,

கார்த்திக்கு ஜோடியாக 'விருமன்' படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் அதிதி ஷங்கர். அதனைத்தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் 'மாவீரன்' படத்தில் நடித்திருந்தார். நடிப்பு மட்டும் இல்லாமல் விருமன் படத்தில் 'மதுர வீரன்' மற்றும் 'மாவீரன்' படத்தில் 'வண்ணாரப்பேட்டை' பாடல்களையும் பாடி ரசிகர்களை ஈர்த்தார்.

தற்போது இவர், விஷ்ணுவர்தன் இயக்கும் 'நேசிப்பாயா' படத்தில் ஆகாஷ் முரளிக்கு ஜோடியாகவும் அர்ஜுன் தாஸுடன் 'ஒன்ஸ்மோர்' படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், அதிதி ஷங்கர் தெலுங்கில் அறிமுகமாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படத்தில் இவர் வெண்ணிநிலா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக போஸ்டர் வெளியாகி உள்ளது.

விஜய் கனகமெடலா இயக்கும் இப்படத்திற்கு 'பைரவம்' என பெயரிடப்பட்டுள்ளது. இதில் பெல்லம்கொண்டா சாய் சீனிவாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். நடிகை அதிதி ஷங்கர் தெலுங்கு மொழி சரளமாக பேசுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்