< Back
சினிமா செய்திகள்
குட் பேட் அக்லி படத்தை தொடர்ந்து மார்க் ஆண்டனி 2 படத்தை இயக்கும் ஆதிக் ரவிச்சந்திரன்?
சினிமா செய்திகள்

'குட் பேட் அக்லி' படத்தை தொடர்ந்து 'மார்க் ஆண்டனி 2' படத்தை இயக்கும் ஆதிக் ரவிச்சந்திரன்?

தினத்தந்தி
|
17 Dec 2024 8:49 AM IST

பிரபல இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்குமாரை வைத்து தற்போது 'குட் பேட் அக்லி' திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார்.

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ஆதிக் ரவிச்சந்திரன். இவர் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான 'திரிஷா இல்லனா நயன்தாரா' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்', 'காதலை தேடி நித்யானந்தா, 'வெர்ஜின் மாப்பிள்ளை', 'பஹீரா' உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

இவரது இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான மார்க் ஆண்டனி படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. விஷால், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்குமாரை வைத்து குட் பேட் அக்லி படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாக வைரலானது. இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், நடிகர் விஷாலை வைத்து ஆதிக் ரவிச்சந்திரன் மார்க் ஆண்டனி 2 படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையில் விஷால் 'துப்பறிவாளன் 2' படத்தை தானே இயக்கி நடிப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அதற்கான பணிகள் தொடங்குவதில் தாமதமானால் நடிகர் விஷால் 'மார்க் ஆண்டனி 2' படத்தில் நடிக்க திட்டம் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. 'குட் பேட் அக்லி' திரைப்படத்தை இயக்கி முடித்துள்ள நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் அடுத்ததாக மார்க் ஆண்டனி 2 திரைப்படத்திற்கான பணிகளை கையில் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்