< Back
சினிமா செய்திகள்
Actually, Im the one who lost the opportunity to work with Suriya - Rajamouli
சினிமா செய்திகள்

'உண்மையில் நான்தான் சூர்யாவுடன் பணியாற்றும் வாய்ப்பை இழந்து விட்டேன்' - ராஜமவுலி

தினத்தந்தி
|
8 Nov 2024 10:39 AM IST

சமீபத்தில் நடந்த கங்குவா பட புரமோசன் நிகழ்ச்சியில் இயக்குனர் ராஜமவுலி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டிருந்தார்.

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா. இவர் தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

வெற்றி ஒளிப்பதிவு செய்யும் இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக உருவாகியுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரலாகியது. இத்திரைப்படம் வருகிற 14-ந் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கிடையில் படக்குழுவினர் மும்பை, புதுடெல்லி, கொச்சி போன்ற இடங்களில் படத்தின் புரமோஷன் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் இப்படத்தின் புரமோசன் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ராஜமவுலி வந்திருந்தார். அப்போது ராஜமவுலி பேசுகையில்,

'சூர்யா பாகுபலி படத்தின் வாய்ப்பை இழந்து விட்டதாக கூறினார். உண்மையில், நான்தான் சூர்யாவுடன் பணியாற்றும் வாய்ப்பை இழந்து விட்டேன். காரணம் எனக்கு சூர்யாவை அவ்வளவு பிடிக்கும். குறிப்பாக அவருடைய நடிப்பு, திரையில் தோன்றும் விதம் அனைத்தும் பிடிக்கும். பாகுபலி படத்தில் நடிக்கவில்லை என்று நீங்கள் எடுத்த முடிவை நான் மிகவும் மதிக்கிறேன். ஏனென்றால் நீங்கள் இயக்குனர் யார் என்பதை மீறி, கதை எப்படி இருக்கிறது என்று பார்த்தீர்கள்' என்றார்

மேலும் செய்திகள்