< Back
சினிமா செய்திகள்
நயன்தாராவுக்கு குவியும் நடிகைகளின் ஆதரவு
சினிமா செய்திகள்

நயன்தாராவுக்கு குவியும் நடிகைகளின் ஆதரவு

தினத்தந்தி
|
16 Nov 2024 3:02 PM IST

நடிகர் தனுஷ் மீது பரபரப்பு குற்றச்சாட்டு முன் வைத்துள்ள நயன்தாராவுக்கு பிரபல நடிகைகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சென்னை,

தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக கொடி கட்டி பறப்பவர் நடிகை நயன்தாரா. இவரும் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து கடந்த 2022-ம் ஆண்டு மாமல்லபுரத்தில் திருமணம் செய்து கொண்டனர்.அந்த திருமணம் ஒரு ஆவணப்படமாக எடுக்கப்பட்டது. இதற்கு 'நயன்தாரா: பியாண்ட் தி பேரி டேல்' என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படம் வருகிற 18-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

இது இவரது சிறுவயது வாழ்க்கை முதல் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தது வரை உள்ள சம்பவங்களை தொகுத்து ஒரு ஆவணப்படம் தயாராகி உள்ளது. இந்த ஆவணப்படத்தின் ஒரு பகுதியில் நயன்தாரா தனது காதல் வாழ்க்கைப் பற்றிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன. விக்னேஷ் சிவன் இயக்கி நயன்தாரா நடித்த 'நானும் ரவுடிதான்' படத்தின் போதுதான் இருவருக்கும் காதல் மலர்ந்தது. இதனால் அந்த படத்தின் படப்பிடிப்பு வீடியோக்களை பயன்படுத்திக்கொள்ள தனுஷிடம் அனுமதி கேட்டுள்ளனர். இரண்டு ஆண்டுகள் கழித்தும் தனுஷ் அனுமதி வழங்கவில்லை.

எனவே, நயன்தாராவின் தனிப்பட்ட செல்போனில் எடுக்கப்பட்ட காட்சியை ஆவணப்படத்தில் பயன்படுத்தியதற்காக ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு தனுஷ் நோட்டீஸ் அனுப்பியுள்ளதையும் நயன்தாரா தெரிவித்துள்ளார். எனவே நடிகர் தனுஷ் மீது நடிகை நயன்தாரா பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். நயன்தாராவைத் தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவனும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதற்கிடையில் தற்போது நயன்தாரா, தனுஷ் மீது பல்வேறு குற்றங்களை அடுக்கியுள்ள நிலையில் தனுஷுடன் மற்ற படங்களில் நடித்த மற்ற நடிகைகளும் நயன்தாராவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள். அதாவது மரியான் படத்தில் தனுஷுடன் நடித்த நடிகை பார்வதி திருவொத்து, நையாண்டி படத்தில் நடித்த நஸ்ரியா , வடசென்னை படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ், 3 படத்தில் நடித்த ஸ்ருதி ஹாசன், கொடி படத்தில் நடித்த அனுபமா பரமேஷ்வர் , அஞ்சு குரியன் , மஞ்சிமா மோகன் , அதிதி பாலன் உள்ளிட்ட நடிகைகள் நயன்தாராவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்

மேலும் செய்திகள்