நடிகை வனிதா விஜயகுமார் நடிக்கும் புதிய படத்தின் புரோமோ வீடியோ வெளியீடு
|நடிகை வனிதா விஜயகுமார் ராபர்ட் மாஸ்டருடன் இணைந்து நடிக்கும் படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
சென்னை,
நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா விஜயகுமார் நடிகையாக இருக்கிறார். வனிதா விஜயகுமார் கடந்த 1995ம் ஆண்டு வெளியான சந்திரலேகா திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர். அதைத்தொடர்ந்து தேவி, நான் ராஜாவாகப் போகிறேன், அநீதி என பல படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் பிக் பாஸ், குக் வித் கோமாளி போன்ற பல சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் பவர் ஸ்டாருடன் இணைந்து 'பிக்கப் ட்ராப்' படத்தில் நடித்து வருகிறார்.
நடிகை வனிதா விஜயகுமார் 2000ம் ஆண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்தார். அடுத்தது ஆனந்த் ஜெய் ராயன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட நிலையில் 2012ம் ஆண்டு விவாகரத்தும் பெற்றுக் கொண்டார். பின்னர் கடந்த 2020ம் ஆண்டு டெக்னீசியனான பீட்டர் பால் என்பவரை மணந்த வனிதா விஜயகுமார் அவரையும் பிரிந்து சென்றார்.
நடிகை வனிதா இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் புகைப்படம் ஒன்றை சமீபத்தில் பதிவேற்றினார். அதில் அவரும் ராபர்ட் மாஸ்டரும் இருக்கும் புகைப்படத்தில் அக்டோபர் 5ம் தேதியைக் குறித்துக்கொள்ளுங்கள் என குறிப்பிட்டிருந்தது.
பலரும் இது திருமண அறிவிப்போ என சந்தேகித்தார்கள். ஆனால் தற்போது அது "மிஸ்ஸஸ் & மிஸ்டர்" படத்தின் புரமோஷன் போஸ்டர் என்று தெரியவந்துள்ளது. இந்தப் படத்தை ஜோவிகா விஜயகுமார் தயாரிக்க வனிதா விஜயகுமார் இயக்கி நடித்துள்ளார்.
நடிகை வனிதா விஜயகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய படத்தின் புரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளார். புதிய படத்தின் புரோமோ வீடியோ வைரலாகி வருகிறது.