< Back
சினிமா செய்திகள்
லப்பர் பந்து படத்திற்காக தனக்கு கிடைத்த பாராட்டுகளை பற்றி பகிர்ந்த நடிகை ஸ்வாசிகா விஜய்
சினிமா செய்திகள்

'லப்பர் பந்து' படத்திற்காக தனக்கு கிடைத்த பாராட்டுகளை பற்றி பகிர்ந்த நடிகை ஸ்வாசிகா விஜய்

தினத்தந்தி
|
9 Nov 2024 6:16 PM IST

ஸ்வாசிகா விஜய், நிதின் நடிக்கும் 'தம்முடு' படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார்.

சென்னை,

ஒரு மலையாள நடிகை, தனது சிறப்பான நடிப்பால் பல மனதை வெல்வதில் ஆச்சரியமில்லை. தற்போது அந்த பட்டியலில் இணையும் நடிகைகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறது. அதன்படி, அதில் சமீபத்தில் இணைந்தவர் லப்பர் பந்து படத்தில் யசோதையாக நடித்த ஸ்வாசிகா விஜய்.

இவர் சினிமாவுக்கு வந்த ஆரம்பத்தில் ஒரு சில தமிழ் படங்களில் நடித்திருந்தாலும், லப்பர் பந்து படத்தின் மூலம்தான் பலரது மனதை வென்றிருக்கிறார். இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய ஸ்வாசிகா விஜய், இப்படத்தில் நடித்ததன் மூலம் தனக்கு கிடைத்த பாராட்டுகளை பற்றி பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில்,

"சுமார் 10 வருடங்களுக்கு பிறகு நான் ஒரு தமிழ் படத்தில் நடித்திருக்கிறேன். இருந்தும் இப்படத்தின் மூலம் எனக்கு கிடைத்த அன்பு உண்மையிலேயே மிகப்பெரியது. யசோதை போன்ற ஒரு கதாபாத்திரம் கிடைத்தது உண்மையிலேயே ஒரு வரம். பா.ரஞ்சித், விஜய் சேதுபதி, மாரி செல்வராஜ், சிவகார்த்திகேயன் என ஒவ்வொருவரும் எனது செல்போன் எண்ணை எப்படியோ பெற்று வாழ்த்து கூறினார்கள். இப்போது படம் ஓ.டி.டியில் உள்ளதால், மலையாள ரசிகர்களிடம் இருந்தும் நிறைய பாராட்டுக்கள் கிடைக்கின்றன' என்றார்.

இவ்வாறு பல பாராட்டுகளை பெற்று வரும் ஸ்வாசிகா விஜய், ஸ்ரீராம் வேணு இயக்கும் 'தம்முடு' படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார். நடிகர் நிதின் நடிக்கும் இப்படம் அடுத்த ஆண்டு மகா சிவராத்திரி அன்று திரைக்கு வருகிறது.

மேலும் செய்திகள்