'புஷ்பா 2' பட நடனத்திற்காக... சமந்தாவின் சம்பளத்தில் பாதி கூட பெறாத நடிகை ஸ்ரீலீலா
|'புஷ்பா 2' படத்தில் நடனமாடியதற்காக நடிகை ஸ்ரீலீலாவிற்கு கொடுத்த சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,
தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக இருந்துவரும் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த படம் 'புஷ்பா தி ரைஸ்'. இப்படத்தில் 'ஊ சொல்றியா' என்ற பாடலுக்கு நடிகை சமந்தா நடனமாடி இருந்தார். இந்த பாடல் இந்தியா முழுவதும் வைரலாகி மிகப்பெரிய ஹிட்டானது.
இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது இதன் இரண்டாம் பாகமாக, 'புஷ்பா 2 தி ரூல்' படம் உருவாகி வருகிறது. இப்படம் டிசம்பர் 5ம் தேதி உலகளவில் வெளியாகவுள்ளது. இந்தபடத்தில் யார் அப்படி அதேபோல நடனமாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இளம் நடிகை ஸ்ரீலீலா புஷ்பா 2 படத்தில் ஒரு குத்து பாடலுக்கு ஆடியிருக்கிறார்.
இந்த பாடலில் நடனமாடியதற்காக நடிகை ஸ்ரீலீலாவிற்கு ரூ.2 கோடி சம்பளம் பெற்றுள்ளார். ஆனால் மூன்று வருடங்களுக்கு முன்பு வெளிவந்த 'ஊ சொல்றியா மாமா' பாடலுக்காக சமந்தா ரூ.5 கோடி சம்பளமாக பெற்று இருந்தார். சமந்தா வாங்கிய சம்பளத்தில் பாதி கூட அவருக்கு கொடுக்கவில்லை என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.