< Back
சினிமா செய்திகள்
திருப்பதியில் சாமி தரிசனம் செய்த ஸ்ரீலீலா...கூட்டத்தில் சிக்கியதால் பரபரப்பு
சினிமா செய்திகள்

திருப்பதியில் சாமி தரிசனம் செய்த ஸ்ரீலீலா...கூட்டத்தில் சிக்கியதால் பரபரப்பு

தினத்தந்தி
|
25 Jun 2024 5:43 PM IST

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை ஸ்ரீலீலா சாமி தரிசனம் செய்தார்.

திருப்பதி,

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஸ்ரீலீலா. இவர் 2019-ம் ஆண்டு வெளியான 'கிஸ்' திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இப்படம் 100 நாட்கள் ஓடி மிகப்பெரிய வெற்றியை அளித்தது.

இதையடுத்து அவருக்கு கன்னடத்தில் வாய்ப்புகள் குவிந்தன. 2021-ம் ஆண்டு 'பெல்லி சான்டட்' என்ற படத்தின் மூலமாக தெலுங்கில் அறிமுகமானார் ஸ்ரீலீலா.

தற்போது பவன்கல்யாண், நந்தமுரி பால கிருஷ்ணா, விஜய் தேவரகொண்டா ஆகியோர் படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். சமீபத்தில், குண்டூர் காரம் படத்தில் நடித்தார். அதிலும், 'குர்ச்சி மாடதபெட்டி' பாடலுக்கு குத்தாட்டம் போட்டு ரசிகர்களைக் கிறங்கடித்தார்.

சமீபத்தில் இவரது 23-வது பிறந்தநாளையொட்டி மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகும் ராபின்ஹுட் படத்தில் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. இந்தப்படம் வரும் டிசம்பர் 20-ம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை ஸ்ரீலீலா சாமி தரிசனம் செய்துள்ளார். சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்த அவரை ரசிகர்கள் சூழ்ந்து செல்பி எடுக்க முயன்றனர். அப்போது ஸ்ரீலீலா கூட்டத்தில் சிக்கினார். இதனால்,அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


மேலும் செய்திகள்