< Back
சினிமா செய்திகள்
Actress Samantha is act in a new web series
சினிமா செய்திகள்

புதிய வெப் தொடரில் களமிறங்கிய நடிகை சமந்தா

தினத்தந்தி
|
21 Sept 2024 12:47 PM IST

'சிட்டாடல்' தொடரையடுத்து புதிய வெப் தொடரில் நடிகை சமந்தா நடிக்கிறார்.

மும்பை,

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவருக்கு தமிழ், தெலுங்கு திரை உலகில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தெலுங்கு மொழியில் ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்கிறார்.

சமந்தா தற்போது 'சிட்டாடல்' தொடரில் நடித்து முடித்துள்ளார். இதனை பிரபல பாலிவுட் இயக்குனர் ராஜ் இயக்கி இருக்கிறார். இந்த வெப் தொடர் நவம்பர் மாதம் 7-ம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாக உள்ளது.

அதனைத்தொடர்ந்து, புதிய வெப் தொடரில் சமந்தா களமிறங்கி இருக்கிறார். இது தொடர்பான அறிவிப்பை கடந்த ஜூலை மாதம் நெட்பிளிக்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. இதற்கு 'ரக்த் பிரம்மாண்ட்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதனை கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி ஹிட் அடித்த 'தும்பத்' படத்தை இயக்கிய ராஹி அனில் பார்வே இயக்குகிறார். மேலும், இதில் ஆதித்யா ராய் கபூர் மற்றும் வாமிகா கபி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில், இந்த வெப் தொடரின் படப்பிடிப்பை சமந்தா தொடங்கி இருக்கிறார். இதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டு தெரிவித்துள்ளார். அதனுடன் பகிர்ந்த பதிவில், 'கனவு காண்பதை நிறுத்தாதீர்கள், ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் படத்தின் படப்பிடிப்புக்கு வந்ததில் மகிழ்ச்சி,' என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்