தனது பாட்டி சுசித்ரா சென்னின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க விரும்பும் நடிகை ரைமா சென்
|தனது பாட்டியும் பழம்பெரும் நடிகையுமான சுசித்ரா சென்னின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க விரும்புவதாக நடிகை ரைமா சென் கூறியுள்ளார்.
சென்னை,
பிரபல இந்தி நடிகையான ரைமா சென் தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார். கடந்த வருடம் காஷ்மீர் பைல்ஸ் படத்தை எடுத்த விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் வந்த வாக்சின் வார் படத்திலும் நடித்து இருந்தார்.
இந்நிலையில், தனது பாட்டியும் மறைந்த பழம்பெரும் நடிகையுமான சுசித்ரா சென்னின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க விரும்புவதாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,
'பாட்டி சுசித்ரா சென்னின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக்கப்பட்டால் அதில் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறேன். என் பாட்டி மிகவும் தனிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்தார், அவருடைய பக்கத்து வீட்டாருக்கு கூட அவரைத் தெரியாது. சினிமாவை விட்டு விலகிய பிறகும் அதையே விரும்பினார். எனவே, அந்த ஸ்கிரிப்ட் அவரது வாழ்க்கைக்கு மரியாதை கொடுக்கும் விதத்தில் இருக்க வேண்டும், அவரை வருத்தப்படுத்தும் விதமாக இருக்கக்கூடாது' என்றார்.
தொடர்ந்து பேசுகையில், 'ஒருவேளை என் பாட்டி சுசித்ரா சென்னின் படங்களில் ஒன்றை ரீமேக் செய்ய முடிந்தால், நான் டீப் ஜுவேலே ஜெய்யை தேர்வு செய்வேன், ஏனென்றால், அதில், அவர் தனது திறமையை அழகாக வெளிப்படுத்தும் ஒரு சிறப்பான பாத்திரத்தில் நடித்திருந்தார்' என்றார்.