குளியல் வீடியோவை வெளியிட்ட பிரபல நடிகை - இணையத்தில் வைரல்
|கன்னடம் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்பட ஏராளமான மொழிப்படங்களில் பிரணிதா நடித்து வருகிறார்.
பெங்களூரு,
கன்னட திரைஉலகில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் பிரணிதா. இவர் கன்னடம் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்பட ஏராளமான மொழிப்படங்களில் நடித்து வருகிறார். கடந்த 2021-ம் ஆண்டு கொரோனா காலத்தில் திருமணம் செய்து கொண்டார்.
தற்போது ஒரு குழந்தைக்கு தாயாக இருக்கும் பிரணிதா, தொடர்ந்து தனது அழகை மெருகேற்றி கன்னட திரைஉலகை கலக்கி வருகிறார். சமூக வலைதளங்களில் எப்போதும் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் நடிகை பிரணிதா, அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
தற்போது அவர் குளியல் தொட்டியில் நுரை பொங்கிய நீரில் அமர்ந்து குளிக்கும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிரணிதாவின் குளியல் வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் பலரும், அவரை வர்ணித்து தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள். திருமணமான பின்பும் பிரணிதாவுக்கு அழகு குறையவில்லையே என்றும் கூறி ரசிகர்கள் அவரை புகழ்ந்து கவிதைபாடி வருகிறார்கள்.