< Back
சினிமா செய்திகள்
Actress Nidhi Pradeeps debut film as a heroine begins with a pooja
சினிமா செய்திகள்

நடிகை நிதி பிரதீப் கதாநாயகியாக அறிமுகமாகும் படம் பூஜையுடன் தொடக்கம்

தினத்தந்தி
|
10 Nov 2024 5:50 PM IST

நிதி பிரதீப் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஐதராபாத்தில் பூஜையுடன் துவங்கியது.

ஐதராபாத்,

கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற 'மேம் பேமஸ்' படத்தை இயக்கி நடித்திருந்தவர் சுமந்த் பிரபாஸ். இவர் தற்போது தனது அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். அதன்படி, சுமந்த் நடிக்கும் இந்த படத்தை புதிய நிறுவனமான ரெட் பப்பட் புரொடக்சன்ஸ் தயாரிக்கிறது.

கதாநாயகியாக நிதி பிரதீப் நடிக்க உள்ளார். இவர் கதாநாயகியாக நடிக்கும் முதல் படம் இதுவாகும். கதாநாயகியாக அறிமுகமாகும் இவருக்கு பலரும் வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர். மேலும், ஜெகபதி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அல்லு அரவிந்த் திரைக்கதை எழுதியுள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் சுபாஷ் சந்திரா இயக்குகிறார்.

இந்நிலையில், இப்படத்தின் பூஜை இன்று ஐதராபாத்தில் உள்ள ராமாநாயுடு ஸ்டுடியோவில் நடைபெற்றது. இதில், படக்குழுவை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். இது தொடர்பான புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகள்