நடிகை மேகா ஆகாஷுக்கு நிச்சயதார்த்தம்
|நடிகை மேகா ஆகாஷுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.
சென்னை,
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் மேகா ஆகாஷ். அதனைத்தொடர்ந்து, தனுஷுடன் என்னை நோக்கி பாயும் தோட்டா, சிம்புவுக்கு ஜோடியாக வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தில் நடித்து பிரபலமானார்.
பின்னர் தெலுங்கில், டியர் மேகா, ராஜ ராஜ சோரா, பிரேமதேசா, ராவனசுரா போன்ற திரைப்படங்களில் நடித்தார்.
கடைசியாக இவரது நடிப்பில், சபாநாயகன், வடக்குப்பட்டி ராமசாமி, மழை பிடிக்காத மனிதன் உள்ளிட்ட படங்கள் வெளியாகின. இந்நிலையில், நேற்று மேகா ஆகாஷுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.
சாய் விஷ்ணு என்பவருடன் நடிகை மேகா ஆகாஷுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை நடிகை மேகா பகிர்ந்து தனது ஆசை நிறைவேறியதாக இன்ஸ்டாகிராமில் நெகிழ்ச்சி பதிவை பகிர்ந்திருக்கிறார். அதனைத்தொடர்ந்து, ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.