'தங்கலான்', 'கங்குவா' பற்றிய நடிகை மாளவிகா மோகனனின் பதிவு வைரல்
|நடிகர் சூர்யா குறித்து ஒரு வார்த்தையில் மாளவிகா மோகனன் பதிலளித்தார்.
சென்னை,
நடிகை மாளவிகா மோகனன் மலையாள சினிமாவில் 2013-ம் ஆண்டில் வெளியான "பட்டம் போலெ" என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ரஜினிகாந்தின் சூப்பர் ஹிட் படமான "பேட்ட" படத்தில் நடித்திருந்தார்.
அதன் பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்திலும், நடிகர் தனுஷ் நடித்த 'மாறன்' படத்திலும் நடித்திருந்தார். தற்போது இவர் பா. ரஞ்சித் இயக்கத்தில் 'தங்கலான்' படத்தில் நடித்து முடித்து உள்ளார்.
இந்த நிலையில், தனது எக்ஸ் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடியுள்ளார். அப்போது, அவர்களின் பல்வேறு விதமான கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில் ஒரு ரசிகர், நடிகர் சூர்யா குறித்து ஒரு வார்த்தையில் கூறுமாறு கூறினார். அதற்கு மாளவிகா,
'சூர்யா மிகவும் ஈர்ப்பு மிகுந்த ஒருவர். விரைவில் அவருடன் பணியாற்ற விரும்புகிறேன். எண்ணங்களை வெளிப்படுத்தும் கண்கள் அவருக்கு உள்ளன, இல்லையா?. 'தங்கலான்' மற்றும் 'கங்குவா' இரண்டுமே பிளாக்பஸ்டர் படங்களாக மாறும் என்று நம்புகிறேன். கங்குவா படக்குழுவுக்கு வாழ்த்துகள், இவ்வாறு கூறினார்.
தற்போது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், அவர் தனக்கு எப்போதும் பிடித்த நடிகர் தளபதிதான் என்றும் ரசிகரின் ஒரு கேள்விக்கு பதிலளித்தார்.