துபாயில் யூடியூபர் இர்பான் உடன் பிரபல நடிகை
|துபாய்க்கு சென்று வரும் இர்பான் தற்போது துபாயில் விழா ஒன்றில் நடிகை கீர்த்தி சுரேஷை சந்தித்து போட்டோ எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் பிரபல யூடியூபராக வலம் வரும் இர்பான் ஒவ்வொரு ஊர் மற்றும் நாடுகளுக்குச் சென்று அந்த நாட்டின் உணவு வகைகளை ருசி பார்த்து பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.அந்த வகையில் இவரது யூடியூப் பக்கத்தில் 40 லட்சம் பேர் வரை பின் தொடர்ந்து வருகிறார்கள்.
கமல்ஹாசன், விஜய், உதயநிதி ஸ்டாலின், ஐஸ்வர்யா ராஜேஷ், பிக் பாஸ் மாயா, சிவாங்கி என பல பிரபலங்களை சந்தித்து வீடியோக்களை வெளியிட்டு வரும் யூடியூபர் இர்பான் சமீபத்தில் தனக்கு பிறக்கப் போகும் குழந்தையின் பாலினத்தை வீடியோ வெளியிட்ட நிலையில் அவருக்கு எதிராக வழக்கு பாய்ந்தது.
தமிழ்நாட்டின் பிரபல யூடியூபராக வலம் வரும் இர்பான், துபாயில் தனது மனைவிக்கு பரிசோதனை செய்து தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை விழா நடத்தி, அறிவித்து அதனை வீடியோ எடுத்து பதிவிட்டார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோ 2 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
இந்த நிலையில் பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை அறிவித்த இர்பான் மீது நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை பரிந்துரைத்துள்ளது. இது தொடர்பாக வாட்ஸ்அப் மற்றும் இ-மெயில் மூலம் விளக்கம் கேட்டு சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து தன்னை தொடர்பு கொண்ட சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் இர்பான் மன்னிப்பு கோரினார்.
தனது குழந்தையின் பாலின வீடியோவை டெலிட் செய்து விட்டு மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிடுவதாக இர்பான் சொன்ன நிலையில், அவர் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என சுகாதாரத்துறை அறிவித்தது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. ஏகப்பட்ட விமர்சனங்களும் விவாதங்களும் நடைபெற்றன.
அடிக்கடி துபாய்க்கு சென்று வரும் இர்பான் தற்போது துபாயில் நடிகை கீர்த்தி சுரேஷை சந்தித்து போட்டோ எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.