திருப்பதியில் சாமி தரிசனம் செய்த கீர்த்தி சுரேஷ்
|சமீபத்தில் கீர்த்தி சுரேஷ், தனது காதலரை அறிமுகம் செய்திருந்தார்.
திருப்பதி,
மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ், 2013-ம் ஆண்டு பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான கீதாஞ்சலி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதனைதொடர்ந்து ரஜினிமுருகன், ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம், மாமன்னன், சைரன் போன்ற படங்களில் நடித்தார்.
நடிகை சாவித்ரி வாழ்க்கையை மையமாக கொண்டு உருவான நடிகையர் திலகம் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது கிடைத்தது. தற்போது அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள 'பேபிஜான்' என்ற பாலிவுட் படத்தில் வருண் தவானுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.
சமீபத்தில் கீர்த்தி சுரேஷ், தனது பள்ளி கால நண்பரான ஆண்டனியை 15 வருடங்களாக காதலிப்பதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், தனது குடும்பத்தினருடன் திருப்பதி ஸ்ரீ வெங்கடேஷ்வரா சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். பின்னர் பேசிய கீர்த்தி சுரேஷ் தனக்கு அடுத்த மாதம் கோவாவில் திருமணம் நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.