< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
நடிகை கங்கனா ரனாவத் ஈஷா யோகா மையத்தில் தரிசனம்
|13 Jun 2024 5:28 AM IST
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் நடிகை கங்கனா ரனாவத் மண்டி தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி.யானார்.
கோவை,
தமிழில் தாம்தூம், சந்திரமுகி-2, தலைவி உள்ளிட்ட படங்களிலும், இந்தியில் பல படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ரனாவத். இவர் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இமாசல பிரதேசத்தில் உள்ள மண்டி தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி.யானார்.
இந்தநிலையில் கங்கனா ரனாவத் கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்துக்கு வந்தார். அங்குள்ள ஆதியோகி சிலையை தரிசனம் செய்தார். அதனை தொடர்ந்து ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குருவிடம் ஆசி பெற்றார். இது தொடர்பான புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்தார்.