நடிகை ஜோதிகா திருப்பதியில் சாமி தரிசனம்
|திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜோதிகா சாமி தரிசனம் செய்த போது ரசிகர் ஒரு சாமி புகைப்படத்தை பரிசாக வழங்கினார்.
திருப்பதி,
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகரான சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் 'கங்குவா' படத்தில் நடித்திருந்தார். கடந்த 14-ந் தேதி வெளியா இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. பலர் இப்படத்தின் மீது எதிர்மறையான விமர்சனத்தை முன்வைத்து வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜோதிகா பதிவு ஒன்றை பதிவு செய்தார். அப்பதிவு இணையத்தில் வைரலானது.
அதனை தொடர்ந்து நடிகர் சூர்யா கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனது 44-வது படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் உள்ளது. அதை தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜி இயக்கும் 'சூர்யா 45' திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பிற்கான பூஜை இன்று மாசாணியம்மன் கோவிலில் நடைபெற்றது.
இதற்கிடையில் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் இணைந்து கர்நாடகாவில் உள்ள மூகாம்பிகை கோவிலில் சாமி தரிசனம் செய்திருப்பதுடன் சிறப்பு யாகமும் நடத்தியுள்ளனர். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது.
அதனை தொடர்ந்து தற்போது நடிகை ஜோதிகா திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். சாமி தரிசனம் செய்துவிட்டு வந்த நடிகை ஜோதிகாவுடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அப்போது ரசிகர் ஒருவர் சாமியின் புகைப்படத்தை பரிசாக வழங்கினார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.