14 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சீரியலுக்கு வரும் நடிகை கவுதமி
|நடிகை கவுதமி 'நெஞ்சத்தை கிள்ளாதே' என்ற சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
சென்னை,
தமிழ் சினிமாவில் 'குரு சிஷ்யன்' படத்தின் மூலமாக அறிமுகமானவர் நடிகை கவுதமி. இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பல நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்து, தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கினார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என்று பல மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். சில காலம் நடிக்காமல் இருந்த கவுதமி, கடந்த 2015-ல் கமல் ஹாசன் நடித்த பாபநாசம் படத்தில் நடித்தார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இதற்கிடையில் இவர் 'இந்திரா, அபிராமி' போன்ற தொலைக்காட்சி தொடர்களில் ஏற்கனவே கதாநாயகியாக நடித்திருக்கிறார். பின்னர் சீரியலில் நடிக்காமல் இருந்தார். இந்த நிலையில் தற்போது மீண்டும் 14 வருடங்களுக்குப் பிறகு சீரியலில் நடிக்க உள்ளார் கவுதமி. அதன்படி 'நெஞ்சத்தைக் கிள்ளாதே சீரியலில்' ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது குறித்த புரோமோ வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.