< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
திருத்தணி முருகன் கோவிலில் நடிகர் யோகிபாபு சாமி தரிசனம்
|1 Jan 2025 10:58 AM IST
புத்தாண்டை முன்னிட்டு நடிகர் யோகிபாபு திருத்தணி முருகன் கோவில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
சென்னை,
நடிகர் யோகி பாபு தற்போது தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கிய 'கோலமாவு கோகிலா' படத்தில் யோகி பாபுவின் நடிப்பு பட்டிதொட்டி எங்கும் பரவியது.
மடோன் அஸ்வின் இயக்கத்தில் 'மண்டேலா' படத்தில் முதல் முறையாக கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பின்னர் 'போட், தி கோட், டீன்ஸ்' போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது விடாமுயற்சி, தி ராஜா சாப், பூமர் அங்கிள் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
மேலும், 'குழந்தைகள் முன்னேற்றக் கழகம்' என்ற படத்தில் நடித்துள்ளார். யோகி பாபுவுடன் செந்தில், அகல்யா உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்த சூழலில், புத்தாண்டை முன்னிட்டு நடிகர் யோகி பாபு இன்று திருத்தணி முருகன் கோவில் சாமி தரிசனம் செய்துள்ளார்.