< Back
சினிமா செய்திகள்
நடிகர் விஜய் மகன் இயக்குனர் ஆகிறார்...!
சினிமா செய்திகள்

நடிகர் விஜய் மகன் இயக்குனர் ஆகிறார்...!

தினத்தந்தி
|
29 Aug 2023 12:32 PM IST

லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தை ஜேசன் சஞ்சய் இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவரது மகன் ஜேசன் சஞ்சய் கனடாவில் உள்ள டொராண்டோ பிலிம் ஸ்கூலில் திரைப்படத் தயாரிப்பு டிப்ளமோ படித்தார். தொடர்ந்து லண்டனில் திரைக்கதை எழுதுவது தொடர்பான பி.ஏ. ஹானர்ஸ் படிப்பை முடித்தார். சில குறும்படங்களை இயக்கியுள்ளார். இந்த நிலையில் லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தை ஜேசன் சஞ்சய் இயக்கவுள்ளதாக தயாரிப்பாளர் சுபாஸ்கரன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து சுபாஸ்கரன் கூறுகையில், "எங்களின் அடுத்த படைப்பை ஜேசன் சஞ்சய் இயக்குவார். இந்த கதை தனித்துவமான, அதேவேளை அனைவரையும் ஈர்க்கும் விதத்தில் இருக்கும். இந்த கதையை அவர் எங்களிடம் கூறும்போதே நாங்கள் திருப்தி அடைந்தோம். அவருடன் இணைந்து பணியாற்றுவதில் ஆர்வமாக இருக்கிறோம்'' என்றார்.

ஜேசன் சஞ்சய் கூறும்போது, "எனது ஸ்கிரிப்டை விரும்பி, அதை உருவாக்க எனக்கு முழு ஆக்கப்பூர்வமான சுதந்திரம் அளித்துள்ளனர். இது எனக்கு மிகுந்த உற்சாகத்தையும், மிகப்பெரிய பொறுப்பையும் தந்திருக்கிறது'' என்றார்.

இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்