< Back
சினிமா செய்திகள்

சினிமா செய்திகள்
அமிர்தசரஸ் பொற்கோவிலில் நடிகர் விக்கி கவுஷல், நடிகை ராஷ்மிகா மந்தனா வழிபாடு

11 Feb 2025 8:28 AM IST
'சாவா' படத்தின் ரிலீஸையொட்டி, அமிர்தசரஸ் பொற்கோவிலில் நடிகர் விக்கி கவுஷல் மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா வழிபாடு செய்துள்ளனர்.
அமிர்தசரஸ்,
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ராஷ்மிகா மந்தனா. இவர் புஷ்பா 2 படத்தின் வெற்றிக்கு பிறகு பாலிவுட் 'சாவா' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் மராட்டிய பேரரசர் சத்ரபதி சிவாஜி - சாயிபாய் தம்பதியின் மூத்த மகனான சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாகியுள்ளது.
இதில் விக்கி கவுசல் சத்ரபதி சம்பாஜி மகாராஜாவாக நடித்துள்ளார். ராஷ்மிகா சம்பாஜியின் மனைவி மகாராணி ஏசுபாய் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 14ம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில், 'சாவா' படத்தின் ரிலீஸையொட்டி, அமிர்தசரஸ் பொற்கோவிலில் நடிகர் விக்கி கவுஷல் மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா வழிபாடு செய்துள்ளனர்.