< Back
சினிமா செய்திகள்
திருவண்ணாமலை கோவிலில் நடிகர் வடிவேலு சாமி தரிசனம்
சினிமா செய்திகள்

திருவண்ணாமலை கோவிலில் நடிகர் வடிவேலு சாமி தரிசனம்

தினத்தந்தி
|
11 Nov 2024 7:46 AM IST

நகைச்சுவை நடிகர் வடிவேலு திருவண்ணாமலை கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

திருவண்ணாமலை,

கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நகைச்சுவையின் வெவ்வேறு பரிணாமங்களை வெளிப்படுத்தியவர் வடிவேலு. இவர் தற்போது பிரபல மலையாள இயக்குனர் ஆர்.கிருஷ்னமூர்த்தி இயக்கத்தில் 'மாரீசன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பகத் பாசில் வடிவேலுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்தநிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த ஒரு வார காலமாக திருவண்ணாமலை அருகே நடந்து வருகின்றன. இதற்கிடையில் நடிகர் வடிவேலு, அண்ணாமலையார் கோவிலில் தீபத் திருவிழா வருவதையொட்டி நேற்று சாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் கோவில் சார்பில் நடிகர் வடிவேலுக்கு மாலை அணிவிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. கோவிலுக்கு வந்த பொதுமக்கள் பலர் வடிவேலுடன் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர்.

மேலும் செய்திகள்